வீரயுக நாயகன் வேள் பாரி -10

வீரயுக நாயகன் வேள் பாரி அத்தியாயம் 10: யவனர்களின் `சொலாண்டியா' கப்பல், வழக்கம்போல் அரபுத் துறைமுகங்களில் தங்காமல், ஓசிலிஸ் வழியாக சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாப்பரிக்கோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கப்பலின் மாலுமி எபிரஸ், நீண்டகால கடல் அனுபவம் பெற்றவன். கடற்காற்றின் குறிப்பு அறிந்து கப்பலைச் செலுத்துவதில் கைதேர்ந்தவன். அதனால்தான் மிகப்பெரிய கப்பலான `சொலாண்டியா’வின் பயணம் இவன் வசமே பல ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பாதுகாப்புத் தளபதி திரேஷியன். தனி ஒருவனே கப்பலை நகர்த்திவிடுவது போன்ற உடல் அமைப்பு கொண்டவன். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்து, `சொலாண்டியா’வின் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய, இவனே முதற்காரணம். இவனது படைவீரர்களும் அபாரத் திறமைகொண்டவர்கள். பாப்பரிக்கோன் துறைமுகம், சரக்கு வர்த்தகத்தில் முக்கியமானது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் கப்பல்கள் பல நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். காரணம், இந்த நிலப்பரப்பின் தனித்த அடையாளமாக விளங்கும் யவன இந்திய வம்சக் கலப்பால் உருவான அழகிகள். ஒரு சாயலில் யவனத் தேவதைகளாகவும் மறு சாயலில்...