எழுத்தாளர் சு. வெங்கடேசன்

எழுத்தாளர்  சு. வெங்கடேசன்






 தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.


மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.


2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.





Comments

Popular posts from this blog

வீரயுக நாயகன் வேள் பாரி - 1

வீரயுக நாயகன் வேள் பாரி - 11

வீரயுக நாயகன் வேள் பாரி - 6