வீரயுக நாயகன் வேள் பாரி - 1
வீரயுக நாயகன் வேள் பாரி அத்தியாயம் 1: குலப்பாடல் மூக்கை விடைத்தபடி பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். மேடு பள்ளமற்ற பாதை இன்னும் விரைந்து, `வா..' என்று தேரோட்டியை அழைத்தது. தேரை ஓட்டும் ஆதன், குதிரையின் கடிவாளத்தைச் சுண்டியபடி வேகத்தை மேலும் அதிகப்படுத்தினான். அதிகாலையில் இருள் கலையத் தொடங்கியபோது இவர்கள் புறப்பட்டனர். அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் தென்திசை மாளிகை அது. அங்குதான் நேற்றிரவுத் தங்கல். அதுவரை தேரை ஓட்டிவந்தவன் நாகு. “இனி அடர் காட்டுப்பகுதியில் பயணம் இருக்கும். இந்த நிலப்பாதையை நன்கு அறிந்த தேரோட்டி இவன். இவனது பெயர் ஆதன். நாளை இவன்தான் உங்களை அழைத்துச் செல்வான்” என்று கூறி வணங்கி விடைபெற்றான். புறப்படும்போது, நாகுவிடம் ஆதன் கேட்டான், ‘‘இவர் யார்... மன்னரின் சுற்றத்தாரா?” “இல்லை... ‘இவரின் அடிமை நான்!’ என்று மன்னர் என்னிடம் கூறினார்" பதில் கேட்டு ஆதன் நடுக்குற்றான். சற்று நிதானித்து, “அப்படியென்றால் ஏன் தனியாக வந்திருக்கிறார். உடன் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லையா?” “பெரும் படையே புறப்பட்டது” என்று சொன்ன நாகு, சற்றுக் குரல் தாழ்த்தி, “முதலில் த...
Comments
Post a Comment