Posts

Showing posts from January, 2021

ஓவியர் மணியம் செல்வன்

Image
ஓவியர்  மணியம் செல்வன் மணியம் செல்வன் (பிறப்பு:அக்டோபர், 1950) புகழ் பெற்ற ஒரு தமிழ் ஓவியர். நாற்பதாண்டுகளாக பல முன்னணி இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளியாகியுள்ளன. இவர் புகழ் பெற்ற ஓவியர் மணியத்தின் மகனாவார். சென்னை ஓவியம் மற்றும் கைவினைக் கலைக் கல்லூரியில் படித்த மணியம் செல்வன், கதைகள், முப்பரிணாம அசைப்படங்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார். இவரது ஓவியங்களில் “ம. செ” என்று கையெழுத்திடுவது வழக்கம். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு பரப்புரைத் திட்டங்களுக்கு ஓவியராகவும், உடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஓவியப் பணிக்காக இந்திய நடுவண் அரசின் என். சி. ஈ. ஆர். டி விருது பெற்றுள்ளார். இவரது மகள்கள் சுபாஷினி மற்றும் தாரிணி இருவரும் ஓவியர்களே. இவரது முதல் ஓவியம் 1976ஆம் ஆண்டில் கல்கியின் வெளியிடப்படாத புதினம் அரும்பு அம்புகள் அவரது மகன் கல்கி இராசேந்திரனால் பதிப்பிக்கப்பட்டபோது அதற்கு ஓவியங்கள் வரைந்து பரவலாக அறியப்பட்டார். மேலும் கல்கி வார இதழில் சிவகாமியின் சபதம் மீண்டும் பதிப்பானபோது அதற்கு வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்காக சுஜாதாவின் பூக்குட்டி மற்றும் மட...

எழுத்தாளர் சு. வெங்கடேசன்

Image
எழுத்தாளர்   சு. வெங்கடேசன்  தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது. மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

வீரயுக நாயகன் வேள் பாரி - Books Buy Online

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி   Books Buy Online  

வீரயுக நாயகன் வேள் பாரி - முன்னுரை

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி முன்னுரை   இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. தலையானங்கானத்துப் போர்,  வ ெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிப...